ஜெருசலம்:ஃபலஸ்தீன் பிரதேசமான மேற்குகரையில் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், எல்லைகளை மூடியது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக்கின் உத்தரவின்படி, மேற்கு கரையில் ஜுதாயி, சமரியா பகுதிகளின் எல்லைகளை நேற்று மூடப்பட்டது. 48 மணிநேரம் முன்கூட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுல் அக்ஸாவை மையமாக வைத்து ஃபலஸ்தீனர்கள் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குதான் இந்த ஏற்பாடுகளை இஸ்ரேல் ஏற்படுத்தியது. அப்பகுதியில் கூடுதல் ராணுவம் அனுப்பப்பட்டு போக்குவரத்தும் தடைச் செய்யப்பட்டது. 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களை மஸ்ஜிதுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மஸ்ஜிதிற்கு செல்ல முற்பட்டவர்களை ராணுவம் திருப்பி அனுப்பியது.
மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உள்ள யூதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இஸ்ரேல் இந்நடவடிக்கை என பத்திரிகைகள் கூறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் பலருக்கும் காயமேற்பட்டிருந்தது. மேற்கு கரையில் இரண்டு புண்ணியஸ் தலங்களை கைவசப்படுத்துவதற்காக பட்டியலில் உட்படுத்திய இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக ஃபலஸ்தீனர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்பெயரில் இரண்டு தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் அத்துமீறி உள்ளே நுழைந்த ராணுவம் ஏராளமானோரை பிடித்துச் சென்றது. போராட்டக்காரர்களை துரத்துவதற்கு இஸ்ரேல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்தாலும், ஃபலஸ்தீனில் நேற்று கடுமையான போராட்டம் நடைபெற்றது. ஹெப்ரானில் போராட்டம் நடத்திய ஃபலஸ்தீன முஸ்லிம்கள் ராணுவத்தினருக்கு எதிராக கல் வீசினர்.
இதற்கிடையே ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட 1500 குடியேற்ற வீடுகள் கட்ட அனுமதியுடன் மேலும் 600 வீடுகள் கட்டுவதற்கு இந்த வாரம் இஸ்ரேல் அனுமதியளிக்கும். மேற்கு கரையில் 2 லட்சம் யூதர்களுக்காக 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனியர்களை தடுக்க மேற்குகரையின் எல்லைகளை மூடியது இஸ்ரேல்"
கருத்துரையிடுக