31 மார்., 2010

அபுதாபி அருகே ரூவைய்ஸ் பகுதியில் பஸ்,லாரி மோதி 6 இந்தியர்கள் பலி 44 பேர் காயம்

அபுதாபி அருகே ரூவைய்ஸ் பகுதியில் பஸ், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை நேரிட்ட இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் அனைவரும் தொழிலாளிகள். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபந்து நிகழ்ந்துள்ளது.

பலியானவர்களில் முழு விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். எனினும் பலியான 6 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 44 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஹயாத்தி, மஃப்ராக், மதினத் ஸயீத் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 24 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலை திருப்பத்தில் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அபுதாபி அருகே ரூவைய்ஸ் பகுதியில் பஸ்,லாரி மோதி 6 இந்தியர்கள் பலி 44 பேர் காயம்"

கருத்துரையிடுக