மாஸ்கோ:ரஷ்யாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாஸ்கோவில் சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்திய அவர்கள், இன்று வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தான் மாகாணத்தில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 9பேர் கொல்லப்பட்டனர்.
தாஜஸ்தான் மாகாணத்தில் உள்ள கிஸ்லியர் நகரில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன. இதில் உள்ளூர் போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விட்டாலி வெடர்னிகோவ். இவரது சீருடையை வைத்து உடல் அடையாளம் காணப்பட்டது.முதல் தாக்குதல் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நடந்தது. பள்ளிக்கூடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டை அந்த காரின் டிரைவரே வெடிக்கச் செய்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், போலீஸ் சீருடை அணிந்த ஒரு நபர் இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தார். அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் நடமாடிக் கொண்டிருந்தனர். எனவே போலீஸாரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
2வது முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source:thatstamil
0 கருத்துகள்: on "ரஷ்யாவில் மீண்டும் தாக்குதல் இரட்டை தற்கொலைப் படைத் தாக்குதலில் 9பேர் பலி"
கருத்துரையிடுக