21 மார்., 2010

கோத்ரா ரயில் எரிப்பு சாட்சி 7 ஆண்டுக்கு முன்பே இறந்த அதிசயம்!

2002 ல், குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைக்குக் காரணமாக கூறப்பட்ட கோத்ரா ரயில் தீக்கிரையான சம்பவத்தின் முக்கிய சாட்சியான மார்வாடி என்பவர் ரயில் தீக்கிரையான சம்பவம் நடப்பதற்கும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

குஜராத், கோத்ரா வட்டத்தைச் சேர்ந்தவர் மார்வாடி. இவர், 2002ல் கோத்ரா ரயில் தீக்கிரையான சம்பவத்தில் ரயிலைத் தீயிட்ட சிலரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து மார்வாடி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ரயில் தீக்கிரையான சம்பவத்தில் அவர் நேரடி சாட்சியாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார். ஆனால் மார்வாடி இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான மார்வாடியைக் கண்டுபிடிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மார்வாடியைக் கண்டிபிடிக்க நடத்திய விசாரணையில், "மார்வாடி உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை" என சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையிலேயே, மார்வாடியின் சார்பாக ஆஜரான அவரது தரப்பு வழக்கறிஞர், "மார்வாடி 7 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டதாக" நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மார்வாடி இறந்ததை உறுதி செய்யும் விதத்தில் கோத்ரா நகராட்சியில் இருந்து பெறப்பட்ட இறப்புச் சான்றிதழையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் 7 ஆண்டுகளுக்கு முன்னரே மார்வாடி இறந்து விட்ட தகவல் பதிவாகியுள்ளது.

கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதா? அல்லது அது ஒரு விபத்தா? என்பதில் இன்னமும் சர்ச்சை நீண்டு கொண்டிருக்கும் நிலையில், கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது தான் என்பதை நிரூபிப்பதற்காக சேர்க்கப்பட்ட முக்கிய சாட்சியே 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனவர் என்பது நீதிமன்றத்திலேயே ஆதாரத்துடன் வெளியாகி இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோத்ரா ரயில் எரிப்பு சாட்சி 7 ஆண்டுக்கு முன்பே இறந்த அதிசயம்!"

கருத்துரையிடுக