லக்னோ:முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் தலைவராக மவ்லான ராபிஃ ஹஸனி நத்வி மூன்றாவது தடவையாக முஸ்லிம் தனியார் சட்டவாரியத் தலைவராக தேர்வுச் செய்யப்பட்டார்.
51 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவில் ஐந்து பெண்களும் தேர்வுச் செய்யப்பட்டனர்.கடந்த முறை பேகம் இக்தர் அலி மட்டுமே செயற்குழு உறுப்பினராக இருந்தார். லக்னோவைச் சார்ந்த பேகம் இக்தர் அலி, டாக்டர் ருக்ஸானா லாரி, டாக்டர் ஸாகியா நஸீம், கொல்கத்தாவைச் சார்ந்த நூர்ஜஹான் ஷக்கீல், ஹைதராபாத்தைச் சார்ந்த அஸ்மா ஸஹ்ரா ஆகியோர் பெண் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.
எட்டு ஸ்தாபக உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஷா முஹம்மது காதிரி, ராஜ்யசபை துணைத்தலைவர் ரஹ்மான்கான் ஆகியோர் இதில் உட்படுவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மவ்லானா ராபிஃ ஹஸனி நத்வி மீண்டும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் தலைவராக தேர்வு"
கருத்துரையிடுக