புதுடெல்லி:டெல்லியை பாகிஸ்தானிலும், கொல்கத்தாவை வங்காள விரிகுடாவிலும் உட்படுத்தி பூகோள வரைப்படம் வெளியிட்ட கிழக்கு ரெயில்வேயின் விளம்பரம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து விளம்பரம் ஏஜன்சி சஸ்பெண்ட் செய்யப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து நாளந்தாவிற்கு செல்லும் மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கொடியசைத்து துவக்கிவைப்பதுத் தொடர்பான விளம்பரம் நேற்று மேற்குவங்காள மாநிலத்திலிலுள்ள பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. அதில்தான் இந்தக்குளறுபடி நடந்துள்ளது.
மம்தா பானர்ஜி பச்சைக்கொடி காட்டும் விளம்பரத்தில் வாரணாசி ஒரிஸ்ஸாவிலும், குவாலியர் மஹாரஷ்ட்ராவிலும் உள்ளது. விளம்பரம் விவாதத்தை கிளப்பியதையடுத்து தலைதப்புவதற்காக ரெயில்வே அமைச்சகம் விளம்பர நிறுவனத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு அவ்விளம்பர ஏஜன்சியை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளது. இதனை ரெயில்வே அமைச்சகத்தின் முக்கிய மக்கள் தொடர்பு அதிகாரி ஸமீர் கோஸ்வாமி தெரிவித்தார்.
ரெயில் செல்லும் வழித்தடங்கள் மட்டுமே விளம்பர ஏஜன்சிக்கு அளித்ததாகவும், பூகோள வரைப்படத்தை அவர்கள் சொந்தமாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள் என கோஸ்வாமி தெரிவித்தார். ரெயிலின் வழித்தடங்கள் அளிப்பது மட்டுமே தங்களது நோக்கம் என்றும் பூகோள வரைப்படத்தை விளம்பரப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக என்று விளம்பர ஏஜன்சி விளக்கமளிக்கிறது.
விளம்பரத்திற்கெதிராக பா.ஜ.கவும், சி.பி.எம்மும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சவால் என்றும், இதற்கு பிரதமர் மன்னிப்புக்கோர வேண்டுமென்றும் பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியை பாகிஸ்தானில் உட்படுத்தியதுதான் அவர்களை கோபத்திற்கிடையாக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோருடன் பாகிஸ்தான் முன்னாள் விமானப்படைத் தலைவர் தன்வீர் அஹ்மதையும் இணைத்து மத்திய பெண்கள்-குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தின் விவாதம் அடங்கும் முன்பே ரெயில்வேத்துறை விளம்பரம் விவாதத்தின் சூட்டை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானிலும் ஒரு விளம்பர விவாதம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் போலீஸ் வெளியிட்டுள்ள விளம்பரம்தான் விவாதத்திற்கிடையாகியுள்ளது. விளம்பரம் வேறொன்றுமில்லை, மாகாண போலீஸ் அதிகாரியின் சின்னமாக விளம்பரப்படுத்தியது இந்தியாவிலிலுள்ள பஞ்சாப் போலீஸின் சின்னமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விவாதத்தைக் கிளப்பிய விளம்பரங்கள்"
கருத்துரையிடுக