காஸ்ஸா:கஸ்ஸாவில் இஸ்ரேல் நேற்றும் தொடர்ந்து விமானத் தாக்குதலில் ஈடுபட்டது.
எல்லைப் பகுதியான ரஃபாவிற்கு அருகிலிலுள்ள விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதலில் ஈடுபட்டது. நள்ளிரவில் நடத்தப்பட்ட ஏவுகணைத்தாக்குதலில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. வீடுகள் சேதமடைந்தன.
நேற்று காஸ்ஸா நகரில் ஆறு இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் இரண்டுபேருக்கு காயம் ஏற்பட்டது.
காஸ்ஸாவிலிருந்து நடந்த தாக்குதலில் ஒரு விவசாயிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானத்தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, கிழக்கு ஜெருசலமிலும், ஹெப்ரானிலும் நடைபெற்ற இஸ்ரேலைக் கண்டித்து நடந்த பேரணியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கண்ணீர் குண்டு உபயோகித்ததிலும், தடியடியிலும் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆவிற்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்துதான் பேரணி நடைபெற்றது.
ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் அக்கிரமத்தைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பேரணி நடைபெற்றது. துருக்கி, லெபனான், பஹ்ரைன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் மீண்டும் விமானத் தாக்குதல்"
கருத்துரையிடுக