வாஷிங்டன்:ஈரானுடன் சிறந்த தூதரக உறவை மேற்க்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பாரசீக புதுவருட நவ்ரூஸ் கொண்டாட்டத்திற்கு ஈரான் மக்களுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதனை இணையதளம் வழியாக அவர் வெளியிட்டுள்ளார். உறுதியான நம்பிக்கைக்குரிய எதிர்காலம் ஈரான் மக்களுக்கு இருப்பதாக வாழ்த்திய ஒபாமா ஈரான் அரசுடனான இடைவெளியை மறைக்கவும் மறந்துவிடவில்லை.
சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்திற்காக அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசுகள் ஈரானை தனிமைப்படுத்தியுள்ளன. ஆனால் பாராக் ஒபாமா தனது செய்தியில் ஈரான் தன்னைத் தானே தனிமைப் படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறார். இத்தகைய சூழலிருந்து மாறி மங்கலமான எதிர்காலத்திற்காக அரசு செயல்படவேண்டும் என கூறுகிறார் ஒபாமா.
ஆன்லைன் கம்யூனிகேசன் கிடைப்பதற்கு துரித நடவடிக்கையை அமெரிக்கா மேற்க்கொள்ளும் எனக்கூறிய ஒபாமா, ஈரான் மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தணிக்கை இல்லாத இணையதள தகவல் பரிமாற்றத்திற்கு நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்பாடுச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈரானில் இணையதள தகவல் பரிமாற்றத்திற்கும், பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடு ஏற்படுத்தியதை ஒபாமா விமர்சித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரான் மக்களுக்கு ஒபாமாவின் வாழ்த்துச் செய்தி"
கருத்துரையிடுக