மனாமா:கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாக பஹ்ரைன் நாட்டு அமைச்சர் கைது செய்யப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ளாட்சி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சராக உள்ளவர் மன்சூர் பின் ரஜாப். இவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கருப்புப் பண மோசடிளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவரது வீட்டிலும் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.32 லட்சம் கருப்புப் பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கைதுச் செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பஹ்ரைனில் ஒரு அமைச்சர் கைதுச் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் ஏற்கனவே பஹ்ரைன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கருப்புப்பண மோசடியில் பஹ்ரைன் அமைச்சர் கைதாகி விடுதலை"
கருத்துரையிடுக