வாஷிங்டன்:ஈராக்கை அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆக்கிரமித்து 7வது ஆண்டு நிறைவுறுவதையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களில் போர் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.ஈராக்கிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர். வெள்ளை மாளிகையின் வெளியிலுள்ள மதில் சுவரில் சவப்பெட்டிகளின் மாதிரிகளை வைத்த 8 போராட்டக்காரர்களை போலீஸ் கைதுச்செய்தது.
ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வது வெட்கக்கேடு என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி மரியா ஆல்வின் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தவறாகும், ஈராக்கில் கொல்லப்படுவது அப்பாவிகளாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒபாமா புஷ்ஷின் கொள்கைகளைத்தான் பின் தொடர்கிறார். அதிபர் எவராயினும், கொல்லப்படுவது அப்பாவி மக்களாகும் என போராட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். கலிஃபோர்னியாவிலும், நியூயார்க்கிலும் போர் எதிர்ப்பு பேரணிகள் நடைப்பெற்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் ஆக்கிரமிப்பிற்கு 7வது ஆண்டு: அமெரிக்காவில் பிரம்மாண்ட போர் எதிர்ப்பு பேரணி"
கருத்துரையிடுக