லண்டன்:பிரிட்டனின் ராணுவ புலனாய்வுப் பிரிவு ஈராக்கில் ரகசிய சித்திரவதைக் கூடங்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய சித்திரவதைக் கூடங்களை லண்டன் நேரடியாக கட்டுப்படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கைதிகளை கண்களைக் கட்டி கடுமையான சூட்டிலும் தூங்கவிடாமல் நீண்ட நேரம் பிரிட்டன் ராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சித்திரவதைப்படுத்தியதாக இண்டிபெண்டண்ட் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 2003 ஆம் ஆண்டில் ஈராக் குடிமகனான ஹோட்டல் பணியாளர் ஒருவரை சித்திரவதைச்செய்து கொன்ற செய்தி வெளியாகியிருந்தது.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டஃபர் வெர்னன் முன்பு இத்தகைய சித்திரவதைக் கூடங்களைக் குறித்து விசாரணை கமிஷனிடம் தெரிவித்ததாகவும் அப்பத்திரிகை கூறுகிறது. ஆனால் ராணுவ ரகசிய புலனாய்வுப் பிரிவு நடத்தும் சித்திரவதைக் கூடங்களின் கட்டுப்பாட்டுமையம் லண்டனாகும். ஆகையால் ராணுவத்திற்கு இதில் தலையிட அனுமதியளிக்கப்படவில்லை என்று கிறிஸ்டஃபர் கமிஷனிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பிரிட்டன் ஈராக்கில் ரகசிய சித்திரவதைக் கூடங்களை நடத்தியதாக தகவல்"
கருத்துரையிடுக