லக்னோ:மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டும், ஃபலஸ்தீனில் முஸ்லிம்களை கொன்றொழித்தும் வரும் இஸ்ரேலுடனான உறவையும் ஒத்துழைப்பையும் இந்தியா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என முஸ்லிம் தனியார் சட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
'ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்த கொள்கைக்கு இந்தியா திரும்பிச் செல்ல வேண்டும். ஃபலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலின் கொடூரத்தை இந்தியா எதிர்க்கவேண்டும்’ என மூன்று நாள் நீண்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் வருடாந்திர மாநாட்டில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விவரித்துக் கொண்டு வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் மவ்லான அப்துற்றஹீம் குரைஷி தெரிவித்தார்.
அரபு நாடுகள் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து இஸ்ரேலுக்கு முன்பாக முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கவேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையுடன் அதிகரித்துவரும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கெதிராகவும், ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற் கெதிராகவும் போராட அரபு நாடுகள் தயாராக வேண்டும் என அப்துற்றஹீம் குரைஷி கூறினார்.
பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியின் கோரிக்கையை வாரியம் தள்ளுபடிச் செய்தது. பாப்ரி மஸ்ஜித் எந்தவொரு கோயிலையும் தகர்த்தோ அல்லது இடத்தை ஆக்கிரமித்தோ கட்டப்பட்டது அல்ல. ஷரீஅத் சட்டப்படி கட்டப்பட்ட மஸ்ஜிதை சொந்த விருப்பப்படி விட்டுக் கொடுக்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என மாநாட்டில் பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பாப்ரிமஸ்ஜித் கமிட்டி கன்வீனர் எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கவும், சட்டத்தை அங்கீகரிக்கவும் பா.ஜ.க தயாராகவேண்டுமென்று இல்லியாஸ் கோரிக்கை விடுத்தார். லிபர்ஹான் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள பாப்ரிமஸ்ஜிதை தகர்க்க திட்டமிட்டவர்களின் பெயர்களை பாப்ரி மஸ்ஜித் இடிப்புவழக்கில் உட்படுத்தவேண்டும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை நாளாக கடைப்பிடிக்கவேண்டும். காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் கலவரத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர போராட்டத்தில் களமிறங்க வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான போராட்ட நிகழ்ச்சிகளுக்கு உருக்கொடுக்க, ஒத்தக்கருத்துடைய அமைப்புகளின் கூட்டம் ஒன்று விரைவில் டெல்லியில் கூட்டப்படும். கலவரத் தடுப்பு சட்ட மசோதாவில் மாற்றங்களைக் கொண்டுவர ஆதரவைத் திரட்ட எம்.பிக்களான முஹம்ம்து அதீஃப், ஷஃபீக்குர்ரஹ்மான் பர்க் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்விற்கும், உதவிக்குமான நடவடிக்கைகளும், கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான பிரிவுகளும் மசோதாவில் உட்படுத்தவேண்டுமென்று குரைஷி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலுடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்- முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை"
கருத்துரையிடுக