காஸ்ஸா:இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலால் தகர்ந்துபோன காஸ்ஸாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் வந்தார்.
ஃபலஸ்தீன் -இஸ்ரேல் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தவும், இஸ்ரேலின் தாக்குதலில் தகர்ந்துபோன ஐ.நாவின் கட்டிடங்களை நிர்மானப் பணிகளைக் குறித்து ஆராயவும்தான் பான் கீ மூன் வந்துள்ளார்.
இஸ்ரேலின் தடையால் தகர்ந்துபோன கட்டிடங்களின் புனர் நிர்மாணப் பணி தடைப்பட்டதாக அறிந்த பான்கிமூன் இஸ்ரேல் உடனடியாக தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இஸ்ரேலின் தாக்குதலில் தகர்ந்து போன 151 அபார்ட்மெண்டுகள் கொண்ட கட்டிடப்பணி கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள் இஸ்ரேலின் தடையினால் வராத்தால் தடைப்பட்டுள்ளது. கஸ்ஸாவில் 15 ஆயிரம் வீடுகள் தகர்ந்து போயின. இவற்றை புனர் நிர்மாணிப்பதற்கான பொருட்களை சர்வதேச உதவிக் குழுக்கள் அளிக்க முன்வந்த பொழுதிலும் இஸ்ரேலின் தடையால் காஸ்ஸாவிற்குள் கொண்டுவர இயலவில்லை.
காஸ்ஸாவிற்கு உதவ பான்கிமூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார். காஸ்ஸா வீதிகளில் திரண்ட ஃபலஸ்தீன் மக்களிடம் பான்கீ மூன் "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்றார்.
அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யவும், தர்க்க விவகாரங்களில் முடிவுக்கு வரவும் பான்கி மூன் இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் பான்கி மூன்:தடையை நீக்க இஸ்ரேலுக்கு கோரிக்கை"
கருத்துரையிடுக