ஜெருசலம்:கிழக்கு ஜெருசலத்தில் குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.
இதன்மூலம் எல்லாவித குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்தவேண்டும் என்று சர்வதேச சமூகமும், மத்தியஸ்தர்களின் கூட்டமைப்பும் விடுத்த கோரிக்கையை புறக்கணித்துள்ளார்.
ஜெருசலமில் 42 ஆண்டுகளாக பின்பற்றி வரும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், ஜெருசலமில் நிர்மானம் என்பது டெல் அவீவ் போல்தான் என அவர் தெரிவித்தார். இவ்விஷயத்தை அமெரிக்காவிடம் தெரிவிப்பேன் எனக்கூறிய அவர் குடியேற்ற நடவடிக்கைகள் தொடரும் என்றார். அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன் நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைக்கு எல்லாவித உறுதுணையும் அளிப்பதாகவும், இதுத்தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும், வெளியுறவு செயலாளர் ஹிலாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்காசிய சமாதான பேச்சுவார்த்தையைப் பற்றி மதிப்பீடுச் செய்யவும், ஃபலஸ்தீன் - இஸ்ரேல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்காவின் மேற்காசியத் தூதர் ஜார்ஜ் மிச்சல் இஸ்ரேல் வந்துள்ளார். இன்று ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் இன்று அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குடியேற்ற நிர்மானத்தை நிறுத்தமாட்டோம்: நெதன்யாகுவின் திமிர் பேச்சு"
கருத்துரையிடுக