ரியாத்:மஸ்ஜித் நபவியில் சென்ற மாதம் நடந்த கொலை முயற்சியினை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உள்ள பாதுகாப்பு படையினர்கள் மட்டும் அல்லாமல் பள்ளியிலும், பள்ளியை சுற்றிலும் 598 கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை அதிகரிதுள்ளனர்.
இதுகுறித்து பிகடியர் யஹ்யா அல்-பிலாதி கூறுகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உஷார் நிலையில் இருப்பதாகவும், எந்த ஒரு நிலைமையையும் சமாளிக்கும் விதத்திலும் பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளதாக கூறினார். கொலை முயற்சி ௦௦சென்ற மாத வெள்ளிக் கிழமை குத்பா தொழுகையில், மனநோயாளி ஒருவன் தன் கையில் கத்தியுடன் இமாம் ஷேக் சலா அல் புதேயிர் அவர்களை கொலை செய்ய முயற்சித்ததற்காக கைது செய்யபட்டான்.
இதுக் குறித்து பிலாதி அவர்கள் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்டுள்ளன. மேலும் கேமராக்கல் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள 89 வாயில்களிலும் தலா 2 பாதுகாப்பு படையினரும் மற்றும் 2 பாதுகாப்பு அதிகாரிகளும் மக்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
source:gulfnews
0 கருத்துகள்: on "சவூதி: புனித பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது"
கருத்துரையிடுக