4 மார்., 2010

சவூதி அரேபியா நம்பிக்கையான கூட்டாளி: மன்மோகன்

இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஒரு நம்பிக்கையான கூட்டாளி என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், நேற்றிரவு ரியாத்தில் நடைபெற்ற சவூதி தொழில் மற்றும் வர்த்தக சபை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மேற்கண்ட கருத்தை தெரிவித்த அவர், இந்தியா - சவூதி அரேபியா இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் வர்த்தக பரிமாற்றத்திற்கும் அப்பாற்பட்டு, ஒரு புதிய விரிவான எரிசக்தி நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

சவூதி அரேபியாவிலுள்ள இந்திய நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களில் மிகத் திறமையான பங்களிப்பை ஆற்றி வருவதாகவும் மன்மோகன் தெரிவித்தார்.

அபாரமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியா - சவூதி அரேபியா பொருளாதாரம், இருநாடுகளையும் சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில் பிரமுகர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் மன்மோகன் மேலும் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சவூதி அரேபியா நம்பிக்கையான கூட்டாளி: மன்மோகன்"

கருத்துரையிடுக