புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் நடந்த மதக்கலவரம் தொடர்பாக காங்கிரஸ்,சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பரேலி சம்பவத்தைக் குறித்து பேசுவதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயாம்சிங் யாதவிற்கு சபாநாயகர் மீராகுமார் முதலில் அனுமதி வழங்கினார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையிலான ஆட்சிதான் கலவரத்திற்கு பொறுப்பு என்றும் இதுத்தொடர்பாக மத்திய அரசு மக்களவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் முலாயாம் சிங் யாதவ் தெரிவித்தார்.
இவருடைய பேச்சுக்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், காங்கிரஸ் எம்.பி ஜகதாம்பிகாபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே மேனகா காந்தி எம்.பியை பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க எழுப்பியது. ஆனால் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் ஒப்புக்கொள்ளவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பரேலி கலவரம்:மக்களவை ஒத்திவைப்பு"
கருத்துரையிடுக