புதுடெல்லி: 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலை வழக்கினை சிறப்பு புலனாய்வுக் குழுவான எஸ்.ஐ.டிக்கு மாற்றியதை வாபஸ் பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவுச் செய்துள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏ காலுபாய் மாலிவாத் என்பவர்தான் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். குல்பர்கா சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 70 முஸ்லிம்களை கொடூரமாக தீவைத்துக் கொன்ற சம்பவத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உட்பட 63 பேரில் ஒருவர் தான் இந்த மாலிவாத்.
வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு இம்மாதம் 21 ஆம் தேதி மோடியுடன் ஆஜராக மாலிவாத்துக்கு எஸ்.ஐ.டி சம்மன் அனுப்பியிருந்தது. அதே வேளையில் குல்பர்கா சொசைட்டி கொலை வழக்கில் அஹ்மதாபாத் விசாரணை நீதிமன்றம் வாதம் கேட்பதை ஒத்திவைக்க நீதிபதி டி.கே.ஜெயின் உள்ளிட்ட 3 நபர் பெஞ்ச் உத்தரவிட்டது.
வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிக்கும், எஸ்.ஐ.டிக்குமெதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறப்பு அரசுத் தரப்பு வக்கீல் ஆர்.கே.ஷா வழக்கிலிருந்து ராஜினாமாச் செய்ததாக சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நீதிபதிகளின் பெஞ்சிற்கு தெரிவித்தார்.
எஸ்.ஐ.டி குற்றச்சாட்டிற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்ப முற்படுவதாகவும், நீதிபதி சாட்சிகளிடம் எதிரி மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வதாகவும் கூறித்தான் அவர் ராஜினாமாச் செய்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை:எஸ்.ஐ.டி புலனாய்விற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்"
கருத்துரையிடுக