வாஷிங்டன்:குடியேற்ற நிர்மாண அறிவிப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து சமாதான நடவடிக்கைகளில் பங்குக் கொள்வதற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கட்டளைகளை வழங்கியுள்ளது.
மேற்குகரையில் குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்தவும், குடியேற்ற நிர்மாண திட்டத்தை வாபஸ் பெறுவதும்தான் முக்கிய கட்டளையாகும்.
ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தையில் எல்லை, தலைநகர், அகதிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் உட்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதயன்யாகுவிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.
அதேவேளையில், அமெரிக்காவின் உத்தரவுகளைக் குறித்து இஸ்ரேல் பதில் கூறவில்லை.மேற்குகரையில் 1600 குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கான சூழலைக் குறித்து நெதன்யாகு அமெரிக்காவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் செய்யும் வேளையில் இவ்வறிவிப்பை வெளியிட்டது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தான் இஸ்ரேல் பிரதமரின் மன்னிப்புக் கோரும் அறிக்கை வெளியானது.
குடியேற்ற அறிவிப்பை தீவிர யூதக்கட்சியான ஷாஸின் மீது சுமத்த முயன்ற நெதன்யாகுவின் முயற்சி வெற்றிப் பெறவில்லை. அதேவேளையில் 35 வருடத்திற்கிடையில் மிகவும் மோசமான இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு இச்சம்பவம் காரணமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் ஒருதலைபட்ச நடவடிக்கைக்கு அமெரிக்கா மூக்கணாங்கயிறு கட்டும் முயற்சிதான் தற்போதைய அமெரிக்காவின் நிலைப்பாடு என ஊடகங்கள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குடியேற்ற நிர்மாணம் நிறுத்த அமெரிக்கா இஸ்ரேலுக்கு கட்டளைகளை வழங்கியது"
கருத்துரையிடுக