16 மார்., 2010

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் பொதுக் கருத்து எட்டப்பட வேண்டும் என மதிப்பிற்குரிய பிரதமர் எதிர்பார்ப்பது ஏன்?: இ.எம்.அப்துற்றஹ்மான்

மத்திய அரசாங்க பணிகளிலும், கல்வியிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி மார்ச் 15, 2010 அன்று பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா பாராளுமன்ற நோக்கி பேரணி நடத்தியது.

பேரணி காலை 11 மணிக்கு மண்டி ஹவுஸிலிருந்து துவங்கியது. இப்பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்ட மக்கள் முஸ்லிம்களுக்கு சமநீதி கோரும் வாசகங்கள், முஸ்லிம்கள் கேட்பது யாசகமல்ல - அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகள் தான் மற்றும் சச்சார் கமிட்டி அறிக்கை முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை படம் பிடித்து காட்டும் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவது ஏன்? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் நடந்து சென்றனர்.

பேரணி ஜந்தர் மந்தரில் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர்ரஹ்மான் அங்கே உரையாற்றினார். அவர தனது உரையில் "முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசு பணிகளிலும், கல்வியிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தின் முந்தைய கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட்டு இன்றுவரை அநாதையாக பாராளுமன்ற மேஜையில் இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு மத்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு அணுசக்தி ஒப்பந்தம் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி கையெழுத்தாக முடிகிறபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் பொதுகருத்து எட்டப்பட வேண்டும் என மதிப்பிற்குரிய பிரதமர் எதிர்பார்ப்பது ஏன்?

ஒரு மதசார்பற்ற அரசாங்கம் பா.ஜ.க போன்ற வகுப்புவாத கட்சிகளின் ஒத்த கருத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட, இந்திய தேசிய காங்கிரஸ் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய காரணத்தால் கேரளா, கர்நாடாக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், அரசு பணிகளிலும் இடஒதுக்கீடு வழங்கியது போல் தேசிய அளவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

சோசியல் டெமோக்ரட்டிக் பார்ட்டியின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் தனது உரையில், "நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் சமமாகவும் ஒட்டுமொத்தவும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஒரு ஜனநாயகத்தை கடைபிடிக்கும் அரசின் கடமையாக இருக்கமுடியும். பல்வேறு சமூகங்களிடையே நிலவும் வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும். ஆனால் இங்கே மேல் தட்டு மக்கள் சிறப்பான மரியாதையுடன் நடத்தப்படுவதும் பிறர் ஒதுக்கப்பட்டும் வருகின்றனர்.ஒதுக்கப்படுபவர்களில் முன்னனியில் நிற்பது முஸ்லிம்களே. இந்த பிரச்சனைக்கு ஒரே தீரவு இடஒதுக்கடுதான்.

நாட்டில் 15 சதவீதம் மக்கள் கல்வியின்றியும், சேரிகளில் வாழும்போது ஆட்சி அதிகார பீடங்கள் நிச்சயமாக சுகமாக ஆட்சி செய்ய முடியாது. சிறுபான்மையினரையும், பிறபடுத்த பட்ட வகுப்பினரையும் வலிமைபடுத்தவல்ல புதிய நேர்மறை அரசியல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அரசியலில் யாசகம் கேட்பதை முடிவுக்கு கொண்டு வந்து ஒடுக்கப்பட்டோரை பலப்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய பங்கை முழுமையாக அவர்கள் அனுபவிக்கச் செய்வோம். இந்த இடஒதுக்கீட்டிற்கு SDPI-ஐ முழு ஆதரவு கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய மற்றும் மாநில தலைவர்களுடன், சமுதாய தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் சிறப்புரையாற்றினர் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ராஜஸ்தானிலிருந்து மணிப்பூர் வரையிலும், தமிழ்நாட்டிலிருந்து டெல்லிவரை உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் கே.எம். ஷரீஃப் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் மற்றும் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து தங்களது கோரிக்கையை (Memorandum) சமர்ப்பித்தார்கள்.

அதில் மத்திய அரசாங்க பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
source:popularfronttn.org

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் பொதுக் கருத்து எட்டப்பட வேண்டும் என மதிப்பிற்குரிய பிரதமர் எதிர்பார்ப்பது ஏன்?: இ.எம்.அப்துற்றஹ்மான்"

கருத்துரையிடுக