மும்பை:ஷொரஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துல்சி பரஜாபதியின் வாக்குமூலம் மற்றும் அவரின் போலீஸ் என்கவுண்டருக்கான விவரங்களை சி.பி.ஐ திரும்ப திரும்ப கேட்டும், குஜராத் அரசு அவ்விவரங்களைத் தராமல் மெளனம் சாதித்து வருகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிகிறது.
கடந்த 2005ம் ஆன்டில், ஷொரஹ்ப்தீன் ஷேக் மற்றும் அவருடைய மனைவி கவுசர் பீ மர்மமான முறையில் போலீஸாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட்டது.
இதில் கொலையை நேரில் பார்த்தவரும் அவ்வழக்கில் ஒரே சாட்சியுமான துல்சி போலீஸ் என்கவுன்டரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
துல்சி, நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குஜராத்திலிருந்து தப்பிக்க முயன்றதாகவும், அதனால் அவரை ராஜஸ்தான் செல்லும் வழியில் என்கவுண்டரில் கொன்றதாகவும் மாநில போலீசார் காரணம்காட்டி வந்தனர்.
இதுகுறித்து சி.பி.ஐ கூறுகையில், துல்சியின் வாக்குமூலம் மற்றும் அவரின் என்கவுண்டருக்கான ஆவணங்களை கேட்டும், இதுவரை குஜராத் அரசு கொடுக்கவில்லை என்றார் ஹர்ஷ் பஹால். அடுத்தக்கட்ட நடவடிக்கையை தெரிவிக்க மருத்த பஹால், அநேகமாக சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை தான் அணுகும் என்று நெருங்கிய தொடர்புகள் தெரிவிக்கின்றன.
source:times of india
0 கருத்துகள்: on "ஷொரஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் தொடர்பான சாட்சியின் விவரங்களை தர மறுக்கும் குஜராத் அரசு"
கருத்துரையிடுக