பாட்னா அருகே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லாலு், "பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அதை விரும்பவில்லை. ராஜ்யசபாவில் வலுக்கட்டாயமாக மகளிர் சட்டதிருத்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் லோக்சபாவில் அப்படி செய்ய இயலாது. மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றால் நாங்கள் மத்திய அரசை கவிழ்ப்போம்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முயன்றால் முன்கூட்டியே தேர்தல் வருவது உறுதி. எனவே இடைத்தேர்தலை சந்திக்க நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் சிறுபான்மை பிரிவு பெண்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். சமூக நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். அத்தகைய உள் ஒதுக்கீடு செய்யாமல் மகளிர் மசோதாவை கண்டிப்பாக நிறைவேற்ற விடமாட்டேன். மீறி முயன்றால், என் பிணத்தின் மீது ஏறி நின்று தான் அந்த மசோதாவை கொண்டு வர முடியும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து விட்டது. அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மகளிர் மசோதா விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது" என்றார் லாலு.
source:thatstamil
0 கருத்துகள்: on "மகளிர் மசோதா- என் பிணத்தின் மீது தான் நடக்கும்: உக்கிரத்தின் உச்சியில் லாலு!"
கருத்துரையிடுக