தெஹ்ரான்:'யு.எஸ்யின் தலையீட்டால் அரபுப் பிரதேசத்துக்கே ஆபத்து உள்ளதாகவும், தீவிரவாதத்தை ஒழித்திடும் பெயரில் வாஷிங்டன் அரபுலக இயற்கை வளங்கள் மற்றும் மூல தளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்ச்சித்தான் அது!' என்று ஈரான் தலைவர் அஹ்மத்நிஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'ஈரானிய எல்லைகளிள் உள்ள ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சில வளைகுடா நாடுகளிள் யு.எஸ்யின் ஆக்கிரமிப்பு, மத்திய கிழக்குலகில் நிலவும் பாதுகாப்பை சீர்குலைகப்படுவதற்கான சதி வேலை' என்று அவர் கூறினார்.
'அமெரிக்காவிற்கு தஞ்சம் தரும் நாடுகளுக்கு நாங்கள் எச்சரிக்கின்றோம், அவர்கள் இங்கு பாதுகாப்பை பலப்படுத்தவோ அல்லது போதைப் பொருள்களை அளிக்கவோ வரவில்லை' என்று ஹொர்முகன் என்ற இடத்தில் பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள், வளைகுடாவின் இயற்கை வளங்களை நெருங்குமானால், அதன் மக்கள் அவர்களின் கைகளை வெட்டுவார்கள் என்றார்.
முன்னதாக, யு.எஸ் ராணுவ அதிகாரி ரொபர்ட் கடெஸ், ஈரானின் அணுசக்தி பிரச்சணையில் சவுதியின் உதவியை நாடியுள்ளார். கடெஸ், புதன்கிழமை சவுதியின் தலைவர் கிங் அப்துல்லாஹ்வை ஈரானின் அணு ஆயுத தயாரிப்பையும், அதன் விளைவுகளை குறித்தும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஈரானுக்கெதிராக வர்த்தக தடையை யு.எஸ் வலியுறுத்தியதாகவும் அதற்கு சவுதி மறைமுக ஆதரவு தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
source - Gulfnews
0 கருத்துகள்: on "அரபு நாடுகளுக்கு யு.எஸ்சின் ஆக்கிரமிப்பால் ஆபத்து: ஈரான் எச்சரிக்கை"
கருத்துரையிடுக