மும்பை:மும்பை நகரத்தில் வெடிக்குண்டு வைக்க திட்டமிட்டதாக மஹாராஷ்ட்ரா தீவிரவாதத் தடுப்பு படையினரால் கைதுச் செய்யப்பட்டனர் அப்துல் லத்தீஃப் மற்றும் ரியாஸ் அலி.
இவர்களிருவரும் அப்பாவிகள் என ரியாஸ் அலியின் தாயாரும், அப்துல் லத்தீஃபின் மனைவியின் தாயாருமான அஸீஸா ஷேக் குற்றஞ்சாட்டுகிறார்.
"போலீசார் பொய்யான வழக்கை ஜோடித்து இருவரையும் கைதுச் செய்துள்ளனர். அவர்களுக்கு தீவிரவாதம் சம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தொடர்பில்லை. எனது மகன் சமீபத்தில்தான் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்துவிட்டு கால் சென்டரில் வேலைத் தேடிக் கொண்டிருந்தான். தற்சமயம் தக்கர் மாலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைப்பார்த்து வந்தான். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. நாங்கள் நினைத்தோம் அவன் நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்று. ஆனால் நேற்று ஏ.டி.எஸ்ஸால் ரியாஸும் அப்துல் லத்தீஃபும் கைதுச் செய்யப்பட்டதாக தகவல் தொலைபேசி மூலமாக ரியாஸின் தந்தைக்கு வந்தது." எனக் கூறுகிறார் அஸீஸா.
அப்துல் லத்தீஃபின் மனைவி நுஸ்ரத் கூறுகையில்,"எனது கணவர் இந்தியாவுக்கு எதிரான எந்தச் செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர் எலக்ட்ரானிக் பொருட்களை மூடும் சீட் கவர்களை தைக்கும் வேலையை செய்து வந்தவர். போலீஸார் கூறுவது முழுப்பொய். இன்று பந்த்ராவில் உள்ள எங்களது வீட்டை போலீஸார் சோதனையிட்டு எனது கணவரின் போட்டோவை எடுத்துச் சென்றனர்." என்றார்.
புனே குண்டுவெடிப்பின் வழக்கை திசைத் திருப்பத்தான் போலீசின் இந்த நாடகமா? என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
செய்தி:coastaldigest
0 கருத்துகள்: on "மும்பை:தீவிரவாதக் குற்றச்சாட்டில் இளைஞர்கள் கைது;வழக்கை போலீசார் ஜோடித்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக