தெஹ்ரான்:ஈரான் குடிமக்களை துன்பத்திற்குள்ளாக்கும் மேற்கத்திய நாடுகளின் தடைக்கெதிராக இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டுவதாக கூறி ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் தலைமையில் பொருளாதார தடை ஏற்படுத்துவதற்கான முயற்சி நடந்துக் கொண்டிருக்கும் சூழலில்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் நிருபமா ராவ் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.
இதுத்தொடர்பாக அவர் கூறியதாவது: "சாதாரணமக்களான பெண்களையும், குழந்தைகளையும் துன்பத்திற்கிடையாக்கும் தடைகளால் எதார்த்த பிரச்சனைக்கு பரிகாரம் காண இயலாது.பிரச்சனைக்குரிய பரிகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் காண முயலவேண்டும்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுதான் ஈரான். அந்த வகையில் ஈரானுக்கு பொறுப்பு உண்டு, ஆனால் சமாதான நடவடிக்கைகளுக்கு அணுசக்தியை தயார் செய்ய ஈரானுக்கு உரிமை உண்டு. அப்பகுதியின் ஸ்திரமற்றத் தன்மையை இந்தியா விரும்பவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈரானுக்கெதிராக தடை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவும், பிரிட்டனும் தூதரக நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் மிலிபந்த் சீனா சென்றிருந்தார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் சவூதியின் ஆதரவைத்தேடி சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரானுக்கெதிராக தடை:இந்தியா எதிர்ப்பு"
கருத்துரையிடுக