ஜெருசலம்: நவீன சியோனிஷத்தின் ஸ்தாபகரான் தியோடர் ஹெஷிலின் கல்லறையை தரிசிக்கச் செல்ல பிரேசில் அதிபர் லூயிஸ் இனாஷியோ லூலா டி சில்வா மறுத்துவிட்டார்.
இதற்கு பதிலடியாக பிரேசில் அதிபரின் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்க இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தோர் லிபர்மன் முடிவெடுத்துள்ளார்.
ஈரான் மஹ்மூத் நிஜாதுடனான நெருங்கிய உறவையும், விரைவில் ஈரான் சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கான அவருடைய தீர்மானத்தையும் லிபர்மன் விமர்சித்திருந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மேற்கு கரை, ஜோர்டான் உள்ளிட்ட தனது மேற்காசிய சுற்றுப்பயணத்தை சமாதானத்திற்கான லட்சியப்பணி என்று பிரேசில் அதிபர் குறிப்பிட்டிருந்தார். லத்தீன் அமெரிக்காவிலும், கரீபியனிலும் அணு ஆயுதங்களோ, நாசகர ஆயுதங்களோ இல்லை என்பதில் தங்களுக்கு பெருமை என்றும், உலகத்தின் பிற பகுதிகளும் எங்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
மேற்காசியாவை அணுஆயுதம் இல்லாத பகுதியாக மாற்ற முயற்சிக்கவேண்டுமென்று கடந்த திங்கள் கிழமை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய லூலா கோரிக்கை விடுத்தார்.
எல்லோருக்கும் நன்மை ஏற்படும் விதமாக மேற்காசியாவில் சமாதானம் ஏற்படுவதை தான் கனவு காண்பதாக ஏற்கனவே இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் ஃபெரஸுடனான சந்திப்பிற்கிடையே பிரேசில் அதிபர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விவகாரத்தில் தலையிடுவதற்கு பிரேசில் விரும்புகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சியோனிஷ ஸ்தாபகரின் கல்லறையை தரிசிக்க பிரேசில் அதிபர் மறுப்பு"
கருத்துரையிடுக