புதுடெல்லி:இந்தியாவின் 200 மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஜிஹாதி தீவிரவாதத்தைக் காட்டிலும் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகளுக் கெதிராக ராணுவத்தை பயன்படுத்த அரசுக்கு சட்டரீதியான உரிமை உண்டு என அவர் தெரிவித்தார்.
மேலும் "தெற்கு ஆசியா வாழ்வதற்கு சிரமாமன பகுதியாக மாறியுள்ளது. பெரிய தேசம் என்ற நிலையில் இந்தியாவுக்கு தெற்கு ஆசியா விவகாரத்தில் மிகப்பெரும் பொறுப்புள்ளது.
ஜிஹாதி தீவிரவாதமும், மாவோ தீவிரவாதமும் தான் இந்தியா பாதுகாப்புத்துறை சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள். 44 மாவட்டங்களில் மிக வலுவாகவும், 200 மாவட்டங்களில் பரந்து விரிந்தும் உள்ள மாவோயிஷம் இதில் மிகவும் அச்சுறுத்தலான சவால்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலாவதி முடியும் முன்பே மாவோயிஷத்தை அடக்க இயலும் என்பதில் உறுதி உண்டு. நக்ஸலைட்டுகள் ஏழைகளோடும் அவர்களின் முன்னேற்றத்திலும் அனுதாபம் காண்பிக்கின்றார்கள் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தினை சிதம்பரம் ஒப்புக்கொள்ள மறுத்தார்.அவர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசை கவிழ்ப்பதே அவர்களுடைய லட்சியம்.
மத சகிப்புத் தன்மையில்லாமை ஜிஹாதி தீவிரவாதத்திற்கு ஊக்கமளிக்கிறது. ஆனால் இஸ்ரேல், ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் நிலவும் அவசரக் காலக்கட்ட நிலை இந்தியாவில் இல்லை. இந்தியாவிற்கு பாகிஸ்தான் நேசத்திற்குரிய அண்டை நாடுதான். கஷ்மீர் தான் இரண்டு நாடுகளுக்கிடையேயான முக்கிய பிரச்சனை. பாகிஸ்தானை மையமாக்கி இந்தியாவிற்கெதிராக செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஐ.எஸ்.ஐ யின் உதவி கிடைக்கிறது என்பது ரகசியமல்ல. இரு நாடுகளுக்கும் அணு ஆயுத பலம் உள்ளதால் போர் பரிகாரமாகாது. பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்". இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மாவோ தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதத்தைக் காட்டிலும் அச்சுறுத்தலானது: ப.சிதம்பரம்"
கருத்துரையிடுக