1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் காங்கிரஸ் ஆட்சியில் இடித்துத் தள்ளப்பட்டப் பொழுது காங்கிரஸ் கூட்டணியிலிருந்த தாய்ச்சபையின் மறைந்த சுலைமான் சேட் சாஹிப் உள்ளிட்டோர் காங்கிரஸின் உறவு வேண்டாம், கூட்டணியை விட்டு விலகுவோம் எனக் கூறிய பொழுது, மஸ்ஜிதை எப்பொழுது வேண்டுமானாலும் கட்டலாம் ஆனால் பதவி கிடைக்காது எனக்கூறி சமாதானம் கூறினார்கள்.
ஈராக்கிலும், ஆப்கானிலும் முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பொழுது 'ஆதரவு தெரிவிக்காதீர்கள் லட்சக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்து, உலகம் முழுவது தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்காவின் சதி இதில் அடங்கியுள்ளது' என விபரம் தெரிந்தவர்கள் கூறியபொழுது, 'வெளியுறவுத்துறை என்ற பதவி கிடைத்தது பெரிய புண்ணியம், நாம் எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடைபெறத்தான் செய்யும்' என்று சமாதானம் கூறினார்கள்.
தற்ப்பொழுது மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனையில் யாதவர் கட்சிகளும், தலித் கட்சியும் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி போர் முழக்கமிட்ட பொழுது வாய்மூடி மெளனியாகவிருந்தார்கள் சமுதாய தாய்ச்சபை எம்.பிக்கள்.
ரெயில்வே காபினட் அமைச்சருக்கு இல்லாத பீதி துணை அமைச்சரான தாய்ச்சபை எம்.பி க்கு ஏன் ஏற்பட்டதோ? கேரளாவில் ராஜ்யசபை எம்.பி பதவிக்கு முட்டி மோதிய பிறகும் சோனியா மேடம் முறைத்துப் பார்த்தவுடன் அடங்கிப் போன தாய்ச் சபையிடம் அனுதாபம் ஏற்பட்டது.
ஆனால் இப்பொழுது அந்த எம்.பி கிடைக்காமல் போனது நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சமுதாயத்திற்கு உதவாத எம்.பி பதவி எதற்கு? ஆமாம், மின்சாரமில்லாமல் மின்விசிறியின் அவசியம் என்ன?
source:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதா? அப்படியென்றால்..."
கருத்துரையிடுக