'அவன் ஒரு தகப்பனுக்கு பிறக்காதவன்! ஆனால் அந்த தகப்பனுக்கு பிறக்காதவன் நம்ம ஆளு!' என்ற அமெரிக்காவில் உபயோகிக்கப்படும் இச்சொல்லில் தந்தை என்பதற்கு பதிலாக தீவிரவாதி என்ற வார்த்தையை இணைத்துவிட்டால் டேவிட் கோல்மான் ஹெட்லியுடன் அந்த நாடு காண்பிக்கும் மென்மையான அணுகுமுறையின் உள்ளடக்கத்தை புரிந்துக் கொள்ள இயலும். இதுதான் அமெரிக்கா.
அமெரிக்கா எதுவும் செய்யலாம்.
உஸாமா பின் லேடனை விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக்கமாட்டோம் என்று ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்கள் கூறவில்லை, மாறாக அந்நிய தேசத்திற்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதே அவர்களுடைய நிலைப்பாடாகும். அதற்கெதிராக அமெரிக்கா செய்தது என்ன? ஆப்கானிஸ்தான் என்ற ஒரு சுதந்திர தேசத்தை ஆக்கிரமித்து குண்டுவீசி தகர்த்து அப்பாவிகளின் குருதியை குடித்து போர்க்களமாக்கி ஒரு அமைதியற்ற தேசமாக மாற்றியது.
மும்பை தாஜ் ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் உள்பட இந்தியாவில் நடந்த ஒரு டஜன் குண்டுவெடிப்புகளில் பங்கெடுத்துள்ளதாக டேவிட் ஹெட்லி அமெரிக்க நீதிமன்றத்திடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.
தாஜ் ஹோட்டல் தாக்குதலில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமாகும். பாரபட்சமற்ற விசாரணைதான் தேவை. ஆனால் தற்ப்பொழுது அவ்வாறு ஒன்றும் நிகழப்போவதுமில்லை. காரணம், டேவிட் ஹெட்லியின் கைவசமுள்ளது அமெரிக்க பாஸ்போர்ட்.
உலகின் எப்பகுதிக்கும் சென்று குண்டுவெடிப்பு நடத்தவும், கொலைகள் செய்யவும் பயன்படும் லைசன்ஸ். விசாரணையில்லாமல் எவரையும் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையில் அடைக்க அமெரிக்காவுக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை.ஆனால் அமெரிக்கா சொந்த நாட்டுக் குடிமகனை எவருக்கும் விட்டுக் கொடுக்காது. அதுதான் அமெரிக்காவின் சட்டம். பிற நாடுகளும் இந்தச்சட்டத்தை பின்பற்றினால்? கேள்விக்கு பதில் கிடையாது!
டேவிட் ஹெட்லிக்கு ஒரு வினாத்தாள் வழங்கி பதில் எழுதி வாங்குவதற்கான அமெரிக்காவிடமிருந்து அனுமதிக் கிடைத்த துணிச்சலில் உள்ளார் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைத்தாலும் ஒப்படைக்கா விட்டாலும் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்க உரிய துணிச்சல் நமது சிதம்பரம் செட்டியாருக்கு இல்லை.
அமெரிக்க நீதிமன்ற அதிகாரியொருவர் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்குத்தான் ஹெட்லி பதில் கூறவேண்டும் என்பதையும் அறிந்தால் சிதம்பரத்துக்கு இன்னும் சந்தோஷம் அதிகரிக்கும்.
இஸ்ரேல் என்ற பயங்கரவாதத்தை உற்பத்திச் செய்யும் தேசத்தின் உளவுப்பிரிவு அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவிலுள்ள வலதுசாரி பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து இந்நாட்டின் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றி வருகின்றார்கள் என்பது ரகசியமன்று.
மலேகான் குண்டுவெடிப்பின் குற்றவாளிகளான சந்நியாசினி பிரக்யா சிங் தாக்கூர், ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முறையாக விசாரித்திருந்தால் இந்த உண்மைகளெல்லாம் வெளிவந்திருக்கும். டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்காத சூழலில் நஷ்டமடைவது இத்தகையதொரு வாய்ப்பாகும். அவ்வாறு விசாரித்தால்தான் குண்டுவெடிப்பு நடந்த உடனேயே ஏற்கனவே தயாராக்கி வைத்திருக்கும் சில அமைப்புகளின் பெயரையும், சில நபர்களின் பெயரையும் வெளியிடுவதும், சிலரைக் கைதுச் செய்து தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதும் முடிவுக்கு வரும்.
0 கருத்துகள்: on "ஹெட்லியும் பின்லேடனும்"
கருத்துரையிடுக