கெய்ரோ:ஷேக் தன்தாவியின் மரணத்தைத் தொடர்ந்து உலகின் பிரசித்திப் பெற்ற பழம் பெரும் இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவராக ஷேக் அஹ்மத் அல் தய்யிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் பார்டியின் கொள்கை கமிட்டியின் உறுப்பினர் தான் 64 வயதான தய்யிப்.
2002-03 ஆம் ஆண்டில் அரசின் அதிகாரப்பூர்வ முஃப்தியாக இருந்தவர் தய்யிப். தய்யிப் பிரான்சில் ஸோர்பன் பல்கலைக்கழகத்திலிருந்து இஸ்லாமிய தத்துவ இயலில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.
10-வது வயதில் பள்ளிக்கூட கல்விக்காக அல் அஸ்ஹரில் சேர்ந்த தய்யிப் 40 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து செயல்படும் மத விவாத கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் தய்யிப்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "எகிப்து:அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத் தலைவராக ஷேக் அஹ்மத் அல் தய்யிப் நியமனம்"
கருத்துரையிடுக