ஜெருசலம்:மேற்கு கரையில் இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்.
ஹெப்ரானில் இஸ்ரேல் ராணுவ வீரனை தடுக்க முயன்ற ஃபலஸ்தீன இளைஞர்களைத்தான் இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இத்துடன் கடந்த இரண்டு தினங்களாக ஃபலஸ்தீனில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கானது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணத்தை எதிர்த்து போராடிய ஃபலஸ்தீனர்களுக்கெதிராக இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஹம்மது கதஸ் என்ற 17 வயது சிறுவன் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த உஸைத் கதஸ்(வயது 20) நேற்று மருத்துவமனையில் மரணமடைந்தார்.
நெப்லூஸில் போராட்டம் நடத்தியவர்களுக்கெதிராக நடந்த தாக்குதலில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. ஃபலஸ்தீனர்களுக்கெதிராக யூத குடியேற்றக்காரர்கள் ராணுவ உதவியுடன் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துதான் போராட்டம் நடந்தது. போராட்டத்தை சந்திக்க இஸ்ரேல் ராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றது இஸ்ரேல்"
கருத்துரையிடுக