கஸ்ஸா:கஸ்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம் ஃபலஸ்தீனிகளின் வீடுகளையும் விவசாய நிலங்களையும் நாசம் செய்தது. வடக்கு கஸ்ஸாவில் பைத் ஹங்கன் பிரதேசத்தில் ராணுவம் இந்த் அட்டூழியத்தை நிகழ்த்தியது.
ராணுவ ஹெலிகாப்டரின் மேற்பார்வையில் ராணுவ டாங்கிகள் வீடுகளை நோக்கி டாங்கிகளால் சுட்டும், வீடுகளை இடித்துத்தள்ளவும் செய்தது. விவசாய நிலங்களை நாசமும் செய்தன. அப்பிரதேசத்தில் ஏராளமான வீடுகள் தகர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடக மையம் தெரிவிக்கிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த ஃபலஸ்தீனர்கள் ராணுவத்தின் மீது கல்லெறிந்தனர். இஸ்ரேலிய ராணுவம் ரப்பர் குண்டால் சுட்டதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. அப்பிரதேசத்தில் கலவர சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, காஸ்ஸா எல்லையில் இஸ்ரேல் போர்விமானம் நேற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணமும், மஸ்ஜிதுல் அக்ஸாவில் பிரவேசிப்பதற்கு கட்டுப்பாடும் ஃபலஸ்தீனில் கலவரசூழலை உருவாக்கியிருக்கிறது. இதற்கெதிராக போராடிய ஃபலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணமடைந்திருந்தனர்.
இதற்கிடையே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக கூறி இஸ்ரேல் விமானத் தாக்குதலையும், ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஸ்ஸாவில் வீடுகள் இடிப்பு, விவசாய நிலங்கள் நாசம்: இஸ்ரேலிய ராணுவம் அட்டூழியம்"
கருத்துரையிடுக