24 மார்., 2010

இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்து நெதர்லாந்துப் பாராளுமன்றத்தின் முன் மனித உரிமைகள் அமைப்பினர் சத்தியாக்கிரகம்

ஹேக்:-நெதர்லாந்திலுள்ள மனித உரிமைகள் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பலஸ்தீன் பேரவையினர் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிராயுத பாணிகளான பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தாக்குதல் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துவிதமான இஸ்ரேலிய அத்துமீறல்களுக்கும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக ஹேக் பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்னால் அமர்ந்து சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர்.

பலஸ்தீன் மக்களுக்கு அல் அக்ஸா மஸ்ஜிதில் தொழுகை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை, அவர்களின் இருப்பிடங்களை நிர்மூலமாக்கி, அகதிகளாக இடம்பெயரச் செய்கின்ற செயல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இஸ்ரேலிய அடாவடித்தனங்களைக் கண்டித்தும், இஸ்லாமியப் புனிதஸ்தலங்களுக்கு ஏற்பட்டுள்ள இஸ்ரேலிய அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தும் மேற்படி அமைப்பினர் தமது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டினர்.

அநீதி இழைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் மக்களின் சார்பாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான அட்டூழியங்களைக் கட்டுப்படுத்துமுகமாக இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடையைப் பிரகடனப்படுத்த முன்வருமாறு நெதர்லாந்து அரசாங்கத்தை நோக்கி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
source: PIC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்து நெதர்லாந்துப் பாராளுமன்றத்தின் முன் மனித உரிமைகள் அமைப்பினர் சத்தியாக்கிரகம்"

கருத்துரையிடுக