24 மார்., 2010

போலி பாஸ்போர்ட் விவகாரம் பிரிட்டனிலிருந்து இஸ்ரேலிய தூதர் வெளியேற்றம்

லண்டன்:ஹமாஸ் தலைவர் படுகொலை வழக்கில், போலி பாஸ்போர்ட் தயாரித்தது தொடர்பான சர்ச்சையில் இஸ்ரேல் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி மாதம் துபாயில் ஹோட்டலி்ல் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளில் பலர் போலியான பாஸ்போர்ட்களை தம்வசம் வைத்திருந்தார்கள்.

மேலும் இஸ்ரேலில் வாழும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குடிமகன்களின் பாஸ்போர்ட்களை திரித்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் கொலையாளிகள் துபாய் சென்றதும் தெரிய வந்தது.

இந்த செயலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அவரைக் கொன்றது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் என்று துபாய் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறுகையில், "இங்கிலாந்து அரசின் விசாரணையாளர்கள் நடத்தி வந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. மோசடிச் செயல்களை செய்தது ஒரு பாதுகாப்பு ஏஜென்சி" என்றும் "பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கள் போலியாக உருவாக்கப்பட்டதில் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் எனவே இஸ்ரேலும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்" என்றார்.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போலி பாஸ்போர்ட் விவகாரம் பிரிட்டனிலிருந்து இஸ்ரேலிய தூதர் வெளியேற்றம்"

கருத்துரையிடுக