வாஷிங்டன்:பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்குமிடையே பிரச்சனைக்குரிய கஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பது இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கஷ்மீர் உள்ளிட்ட இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளை அந்நாடுகளை பேச்சுவார்த்தை மூலம் பரிகாரம் காணவேண்டுமெனவும், இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்க இயலாது எனவும் அமெரிக்கத் தூதர் ரிச்சார்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீருடன் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவும், பாகிஸ்தானும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஆதரவுத் தெரிவிப்பதாகவும், கஷ்மீர் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதில்லை எனவும் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் இல்லை: அமெரிக்கா"
கருத்துரையிடுக