ஸ்ரீநகர்:போலீஸால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட 19 வயது இளைஞர் மருத்துவமனையில் வைத்து இறந்ததைத் தொடர்ந்து கஷ்மீரில் போராட்டம் வலுத்துள்ளது.
ரெயின்வாரியில் பெயிண்டிங் பணியாளரான தன்வீர் அஹ்மது தான் கொல்லப்பட்ட இளைஞர். நேற்று முன்தினம் ஷேரே கஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சில் தன்வீர் அஹ்மத் மரணமடைந்தார்.
ஷோபியானில் நடந்த போராட்டத்தில் கைதுச் செய்யப்பட்ட தன்வீர் பலமாதங்களாக போலீஸ் கஸ்டடியில் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு நோயாளியாகியுள்ளார். கடந்த வருடம் கைதுச் செய்யப்பட்ட தன்வீரை நவ்ஹாட்ட போலீஸ் ஸ்டேசனில் வைத்து இரண்டு மாதத்திற்கு மேல் சித்திரவதைச் செய்யப்பட்டதாக அவருடைய தந்தை மிஃரஜுத்தீன் தெரிவித்தார்.
இரண்டு மாதத்திற்கு பின் விடுதலைச் செய்த பிறகு மீண்டும் இன்னொரு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு மீண்டும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வேதனையால் துடித்த தன்வீரை ஒரு போலீஸ்காரர் தொலைபேசியில் மிஃராஜுத்தீனை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற பிறகு தான் தன்வீருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிட்சை துவங்கினாலும் பலனளிக்காமல் தன்வீர் இறந்து போனார்.
இவருடைய வீடு அமைந்துள்ள மீர்ஷா சாஹிபில் ஜனாஸாவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். ஜனாஸா ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட மக்கள் போலீஸிற்கும், இந்தியாவிற்குமெதிராக கண்ட முழக்கம் எழுப்பினர். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கஷ்மீரில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து கடும் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர்:போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்ட இளைஞர்"
கருத்துரையிடுக