அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைத் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு வருகிற சனிக்கிழமை குஜராத் முதல்வர் மோடி ஆஜராவார் என மோடியின் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி தெரிவித்தார்.
இந்தமாதம் 21 ஆம் தேதி மோடி ஆஜராகவேண்டும் என எஸ்.ஐ.டி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் மோடி ஆஜராகவில்லை, தனக்கு சம்மன் கிடைக்கவில்லை என மோடி தெரிவித்திருந்தார். சனிக்கிழமை மோடி ஆஜராவார் எனத் தெரிவித்திருந்தாலும் இதுக்குறித்து பதில் கூற ஆர்.கே.ராகவன் மறுத்துவிட்டார்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருவதால் அது முடிந்த பிறகு எஸ்.ஐ.டியின் விசாரணைக்கு ஆஜராகுவதுதான் நல்லது என ஆர்.கே.ராகவனுக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார்.
குல்பர்க் சொசைட்டியில் குஜராத் இனப்படுகொலை நடந்த வேளையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி 69 முஸ்லிம்களுடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.டி மோடியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு உத்தரவும், ஆதரவும் மோடியும் அமைச்சர்களும், போலீஸாரும் அளித்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார் ஸாகியா ஜாஃப்ரி. கடந்த வருடம் ஏப்ரல் 27 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் எஸ்.ஐ.டியை குஜராத் இனப்படுகொலை வழக்கை விசாரிக்க நியமித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை:வருகிற சனிக்கிழமை மோடி எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராவார்"
கருத்துரையிடுக