காபூல்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பதவியேற்றப் பிறகு முதல் முறையாக ஆப்கானிஸ்தானிற்கு பயணம் மேற்க்கொண்டார்.
ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒபாமா அவரை மே மாதம் அமெரிக்காவிற்கு வர அழைப்பு விடுத்தார்.
ஊழல், போதைமருந்து கடத்தல் தடைச் செய்வதில் ஆப்கானிஸ்தான் இன்னும் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
பக்ராம் விமானநிலையத்தில் ஒபாமா அமெரிக்க ராணுவத்தினரை பாராட்டி உரை நிகழ்த்தினார். போராளிகளின் தாக்குதலுக்கு பயந்து கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு வந்த ஒபாமா சில மணிநேரங்களில் திரும்பிச் சென்றார். ஆப்கான் அதிபர் கர்ஸாயிடம் கூட ஒபாமா வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. கர்ஸாயி அமெரிக்காவிற்கு மே மாதம் 12 ஆம் தேதி பயணம் செய்வார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தானிற்கு ஒபாமாவின் ரகசியப் பயணம்"
கருத்துரையிடுக