துபாய்:துபாய் போலீஸ் தலைவரான தாஹி கல்ஃபான் தமீமி அரபு உலகின் மிகவும் செல்வாக்குப் பெற்ற நபர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அரேபியன் பிஸினஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நபர்களில் தமீமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஹமாஸ் போராளியான மஹ்மூத் அல் மப்ஹுஹ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை கண்டறிவதிலும், அதனை உலகிற்கு அளிப்பதிலும் காட்டிய துணிச்சலே தமீமியை அரபு உலகின் செல்வாக்கு பெற்ற நபராக உயர்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி 19 ஆம் தேதி துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மப்ஹூஹ் கொல்லப்பட்டார். இந்த கொடும் குற்றத்தை நிறைவேற்றிய மொசாத் ஏஜண்டுகளின் வீடியோக் காட்சிகள் உலகமெங்கும் ஒளிப்பரப்பப்பட்டது.
இந்தக் குற்றத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைதுச் செய்வதற்கான ஆதாரங்கள் துபாய் போலீஸ் வசம் உள்ளதாக தமீமி தெரிவித்திருந்தார்.
லெபனானைச் சார்ந்த பாடகி சூசன் தமீமையும், செச்னியா எதிர்க்கட்சித் தலைவர் ஸுலீம் எமதேவையும் கொன்ற வழக்குகளில் துபாய் போலீஸின் புலனாய்வு மிகவும் பாராட்டப்பட்டிருந்தது. பிரபல சவூதி பிஸினஸ்மேன் வலீத் இளவரசர் அரபுலகத்தின் செல்வாக்குமிக்கவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "துபாய் போலீஸ் தலைவர்: அரபு நாடுகளில் செல்வாக்கு மிக்க நபராக தேர்வு"
கருத்துரையிடுக