லண்டன்:துருக்கி பிரதமர் ரிஸப் தய்யிப் உருதுகான் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார்.
அவர் பிரிட்டீஷ் பிரதமர் கார்டன் பிரவுனை சந்திப்பதற்கு முன் பேட்டியளிக்கையில்,"ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது சுத்த வதந்தியாகும். தங்களது நாட்டு மக்களின் நலனுக்காக ஈரான் அணுசக்தியை பயன்படுத்த உரிமை உண்டு. இஸ்ரேலை எடுத்துக்கொள்ளுங்கள், அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.
ஆனால் சர்வதேச சமூகம் இஸ்ரேலை எச்சரிப்பதுமில்லை, அந்நாட்டிற்கு அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் ஈரானுக்கெதிராக மட்டும் ஏன் அழுத்தம் கொடுக்கின்றார்கள்?" என்ற உருதுகான் "அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் பிற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தமாட்டார்கள் என்று என்ன உறுதியுள்ளது?, ஓ! நீங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை இல்லையா?" என்று கிண்டலாக கேட்டார். உருதுகான் இப்பேட்டியை பி.பி.சிக்கு அளித்தார்.
source:presstv
0 கருத்துகள்: on "அணுஆயுதம்:இஸ்ரேலுக்கு கொடுக்காத அழுத்தம் ஈரானிடம் மட்டும் ஏன்? துருக்கி பிரதமர் கேள்வி"
கருத்துரையிடுக