வாஷிங்டன்:ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க வெள்ளை மாளிகை நோக்கி நேற்று பேரணி நடத்தினர்.
ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான படைகள் நுழைந்து ஏழாண்டுகள் ஆகின்றன. போர் கைதிகள் அப்பாவிகள் எனப பலரை அமெரிக்க ராணுவத்தினர் குவான்டனாமோ சிறையில் அடைத்து துன்புறுத்தினர். இதற்கிடையே நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை உடனடியாக வாபஸ் பெறும் படி போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். தடையை தாண்டி வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற சமூக ஆர்வலர் சின்டி ஷிகான் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்: on "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறக்கோரி வெள்ளை மாளிகை நோக்கி பேரணி"
கருத்துரையிடுக