மொகாதிஷு:கடும் போராட்டம் நடைபெறும் சோமாலியாவின் நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறத் துவங்கியுள்ளனர்.
அல்ஸபாப் போராளிகளை எதிர்க்கொள்ள அரசு ராணுவமும், ஆப்ரிக்கா ஒருங்கிணைந்த படையினரும் கூட்டாக ஆரம்பித்த தாக்குதலில் சோமாலியாவை யுத்த பூமியாக மாற்றியுள்ளது.
ராணுவ நடவடிக்கையை வலுப்படுத்தியதாக அறிவித்துள்ள சோமாலியா அரசு தாக்குதல் நடத்தவிருக்கும் பிரதேசங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது. தலைநகரான மொகாதிஷுவில் இரண்டு தினங்களாக நடைபெறும் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு தலைமையகத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள போராளிகள் அதிபரின் அரண்மனையை நோக்கி நகருவதாக தகவல்கள் கூறுகின்றன. அப்பிரதேசத்தில் 200 வெளிநாட்டு போராளிகள் வந்துள்ளதாக கூறும் ராணுவம் போராளிகளுடன் கடும் போராட்டத்தை மேற்க்கொள்கிறது. மேற்கத்திய ஆதரவுக்கொண்ட அரசின் உதவிக்காக அமெரிக்க ராணுவமும் வந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆப்பிரிக்கன் யூனியனின் உத்தரவின்படி எத்தியோப்பியா ராணுவமும் வருவதால் தாக்குதல் கடுமையாகும். முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள போராளிகள் ஆட்சியை கைப்பற்றுவோம் என அறிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போரை நோக்கி சோமாலியா; நகரங்களிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு அரசு உத்தரவு"
கருத்துரையிடுக