14 மார்., 2010

அரசு பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக்க ம.பி., அரசு திட்டம்

போபால்:அரசு பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக்க மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல் இந்து மதம் சம்பந்தப்பட்ட போதனைகளை திணித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ம் ஆண்டு ம.பி.,யில் பா.ஜ., ஆட்சி அமைந்தது. மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி ஏற்றதும், பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களில் 'வந்தே மாதரம்' பாடலை பாடும்படி அறிவுறுத்தினார். இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதை தொடர்ந்து, பள்ளிகளில் 'சூரிய நமஸ்காரம்' செய்யும் வகுப்பாக இருக்க வேண்டும், என அறிவுறுத்தினார். இவரே சூரிய நமஸ்காரம் செய்து அனைத்து அரசு பள்ளிகளும் சூரிய நமஸ்கார வகுப்பை அறிமுகப்படுத்தினார், இதற்கு மைனாரிட்டி சமுகத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

பள்ளிகளில் மதிய உணவின் போது 'அன்ன சுலோகம்' சொல்ல வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது. இதற்கும் வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த வாரம் மிர்சாபூருக்கு சென்று சுவாமி அரிகரானந்திடம் ஆசி பெற்ற பின் முதல்வர் சவுகான், "பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை அவசியம். எனவே, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க உள்ளோம்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "உடனடியாக இந்த பாடம் பள்ளிகளில் அறிமுகப்படுத்த மாட்டோம். கீதை பாடத்தை பள்ளி பாடங்களில் எந்த வகையில் அளிக்கலாம், என்பது குறித்து ஆய்வு கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அந்த கமிட்டி அளிக்கும் பரிந்துரையின் பேரில், கீதை பாடம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

முதல்வர் சவுகானின் இந்த திட்டத்திற்க்கு காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சோரி குறிப்பிடுகையில், "பகவத் கீதை இந்து மதத்தை தழுவியது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு போதித்தால் மற்ற சமூகத்தினர் குரானையும், பைபிளையும், குரு கிரந்த சாகிப்பையும் பாடமாக வைக்க சொல்வர்" என்றார்.
source:dinamalar

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசு பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக்க ம.பி., அரசு திட்டம்"

கருத்துரையிடுக