ஷார்ஜா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
ஷார்ஜாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கொல்லப்பட்ட வழக்கில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக மக்களவையில் அமைச்சர் கூறினார்.
இதற்காக துபையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாட முன்னணி வழக்கறிஞர் மையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காகும் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த குடிபோதை தகராறில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.இதில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து ஷார்ஜா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இந்தியர்களுக்காக வாதாட முகமது சல்மான் எனும் சட்டவியல் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக இந்நிறுவன வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

source:dinamani
0 கருத்துகள்: on "ஷார்ஜா:17 இந்தியர்களுக்கான சட்ட செலவை அரசே ஏற்கும்- அமைச்சர் வயலார் ரவி"
கருத்துரையிடுக