22 ஏப்., 2010

தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை

சண்டிகர்:ஹரியானாவில் ஹிஸார் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் ஊனமுற்ற தலித் இளம்பெண் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.அப்பெண்ணின் தந்தைக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

தலித்துகள் வசிக்கும் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சுமன். அவருக்கு வயது 18 ஆகிறது. இவருடைய தந்தையான தாராசந்த் 90 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சிலர் தீவைத்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பிரிவினருக்கு இடையிலான முன்விரோதம் இத்தாக்குதலுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அப்பகுதியில் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தலித் பெண்களிடம் சிலர் முறைகேடாக நடந்தததால் தலித் இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.

அதேவேளையில், வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தார்கள் என்பதுக்குறித்து சரியான விபரம் கிடைக்கவில்லை என போலீஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை"

கருத்துரையிடுக