22 ஏப்., 2010

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட கப்பலை சோமாலியா கொள்ளைக்காரர்கள் கடத்தினர்

ஸலாலா:சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் ஒமானில் ஸலாலா கடற்கரையில் நின்ற லைபீரியக்கப்பலை கடத்தினர். கடந்த புதன் கிழமை ஸலாலாவிலிருந்து 305 கி.மீ தொலைவில் 47,183 டண் எடைக்கொண்ட கப்பல் கடத்தப்பட்டது.

க்ரீக் கம்பெனியான சமார்டிசிஸ் மெரிடைம் எண்டர்ப்ரைசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது இந்தக்கப்பல். ஐக்கிய அரபு அமீரகத்தில் ருவைஸிலிருந்து புறப்பட்டு சூயஸ் கால்வாயை கடந்துச் செல்லவேண்டிய இந்தக்கப்பலில் 21 பிலிப்பைன்ஸ் நாட்டைச்சார்ந்த பணியாளர்கள் உள்ளனர்.

சோமாலிய கடல் பகுதியில் கப்பல்களை கடத்துவது வழக்கமானது என்றாலும், ஓமான் கடல் பகுதியில் கப்பலை சோமாலியா கொள்ளைக்காரர்கள் கடத்துவது இது முதல் முறையாகும். அரபியக்கடலுக்கும், செங்கடலுக்கும் இடையில் 25000 கப்பல்கள் ஒரு வருடத்தில் கடந்து செல்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட கப்பலை சோமாலியா கொள்ளைக்காரர்கள் கடத்தினர்"

கருத்துரையிடுக