22 ஏப்., 2010

அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் டோரத்தி ஹைட் மரணம்

வாஷிங்டன்:அமெரிக்காவில் பிரபலமான மனித உரிமை ஆர்வலரான டோரத்தி ஹைட் மரணமடைந்தார். 98 வயதான டோரத்தி வாஷிங்டனிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் மரணத்தை தழுவினார்.

40 ஆண்டுகாலமாக கறுப்பு நிறத்தவர்களான பெண்களின் தேசிய அமைப்பின் தலைவராக இருந்த டோரத்தி அமெரிக்க ஆயுதப்படையில் இனவெறிப்பாகுப்பாட்டிற்கும், ஆண்-பெண் சமத்துவத்திற்காகவும் வாதிட்ட வழக்கறிஞராவார்.

1912 ஆம் ஆண்டு வெர்ஜீனியாவில் பிறந்த டோரத்தி 1950-60 காலக்கட்டங்களில் மார்டின் லூதர் கிங்குடன் பணியாற்றியுள்ளார். 1963 ஆம் ஆண்டு 'எனக்கொரு கனவு உண்டு' என்ற மார்டின் லூதர் கிங் பிரசித்திப்பெற்ற உரையை நிகழ்த்தியபொழுது அம்மேடையில் டோரத்தியும் அமர்ந்திருந்தார்.

அமெரிக்காவின் உயர் விருதான ப்ரசிடன்சியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்(1994), காங்கிரஸனல் கோல்ட் மெடல்(2004) ஆகியவற்றை பெற்றுள்ளார் டோரத்தி.

டோரத்தியின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அளித்த இரங்கல் செய்தியில்,’மனித உரிமை ஆர்வலர்களின் நல்லதொரு தாயாகவும், அமெரிக்கர்களின் நாயகியுமான டோரத்தி மனித உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க பெண்மணி என்ற நிலையில் காலம் நினைவில் கொள்ளும்’ என்றார் அவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் டோரத்தி ஹைட் மரணம்"

கருத்துரையிடுக