கடந்த புதனன்று மும்பை நீதிமன்றத்தில் 26/11 வழக்கின் இரு தரப்பு விசாரணை முடிவுக்கு வந்தது. அப்போது, ஆஸ்மி இவ்வழக்கின் துவக்கத்தில் சாட்சிகளை குறுக்குவிசாரணைச் செய்தபொழுது எழுப்பிய 3 முக்கியமான கேள்விகள், 26/11 வழக்கில் போலீசாரால் ஜோடிக்கப்பட்ட பொய்களை வெளிச்சம் போட்டு காட்டியது மட்டுமல்லாமல் இவ்வழக்கை உண்மையின் பக்கம் திருப்பியும் உள்ளது.
வழக்கின் இருதரப்பு விசாரணையை முடிக்கும் சில நிமிடத்திற்கு முன், நீதிபதி தஹாலியானி அரசு வக்கீல்களுக்கு எழுப்பிய நான்கு கேள்விகள் அரசு தரப்பு வாதத்தின் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக்காட்டின.
அக்கேள்விகளில், ஆஸ்மி எழுப்பிய 3 கேள்விகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிபிடத்தக்கது. இதோ, நீதிபதி எழுப்பிய கேள்விகளும் அதற்கு அரசு வக்கீல் உஜ்ஜல் நிக்காம்மின் பதில்களையும் பார்ப்போம்.
கேள்வி.1-பாகிஸ்தானின் நூருத்தீனுடன் பஹிம் அன்சாரியின் நேபாள சந்திப்பின் அதிகாரப் பூர்வ ஆவணங்கள் அல்லது ஆதாரம் உள்ளதா?
பதில்.1- இல்லை ஐயா
கேள்வி.2-26/11 அன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் அபு இஸ்மாயில் பாக்கேட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைப்படத்தில் ரத்தம் படிந்துள்ளதா இல்லையா என்பதை கண்டறிய ஃபோரேன்சிக் ஆய்விற்கு அனுப்பப்பட்டதா?
பதில்.2 -இதற்க்கும் எதிர்மறையான பதில் வந்தது.
கேள்வி.3-ஏன் குற்றவாளிகள் கை வரைபடத்தை பயன்படுத்தினார்கள்? தற்போது கூகிள் மேப்ஸ் போன்ற தொழில் நுட்பம் கை வரைபடத்தை விட தெளிவாக பயனளிக்குமே!
பதில்.3 -இதை பயன்படுத்திய குற்றவாளிகளிடம் தான் கேட்கவேண்டும்.
கேள்வி.4-வெவ்வேறு பேனாக்கள் அறிக்கை எழுதும் போது பயன்படுத்தப்பட்டதா?
பதில்.4 -இது பெரிய விஷயமே கிடையாது. அறிக்கை எழுதும் போது பாதியில் பேனாவின் மை தீர்ந்திருக்கும்.
சந்திப்புக் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்மி:
கடந்த ஜனவரி 2008யில், பஹிம் மும்பையின் கை வரைபடங்களை தயாரித்து நூருத்தீன் ஷேக்கிடம் கொடுத்ததாகவும், ஷேக் அதை பாகிஸ்தானின் ஜாகிர் ரஹ்மான் என்பவரிடம் அளித்ததாகவும், பின்னர் அவர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்ததாக போலீஸ் தரப்பு வாதம் இருந்தது.
இதை அரசுத்தரப்பு வக்கீல், நூருத்தீனை குறுக்கு விசாரனை செய்து, அவர் பஹிமை நேபாளத்தில் வைத்து சந்தித்ததாவும், அப்பொழுது வரைபடங்களை கைமாற்றியதாக நூருத்தீன் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர், ஆஸ்மி நூருத்தீனை குறுக்கு விசாரணை செய்து பல புதிர்களை வெளிப்படுத்தினார். அதில் முக்கியமானது, ஆஸ்மி நூருத்தீனிடம் இந்திய நேபாள எல்லையை கடந்து சென்றதற்கான ஆதாரங்களை கேட்டதும், பதில் அளிக்க திணறினார் நூருத்தீன். அவரை மேலும் குறுக்கு விசாரணை செய்த ஆஸ்மி, பின்னர் நீதிபதியிடம் பல முக்கிய கருத்துகளை கொண்டு இது ஜோடிக்கப்பட்ட சாட்சி என்று முறையிட்டார்.
வரைபடத்தில் எந்த இரத்தக் கரையும் இல்லை:
இவ்வழக்கில், முக்கியமான ஒன்றாக கருதப்படுவது அபு இஸ்மாயிலிடமிருந்து கிடைக்கப் பெற்றதாக கருதப்படும் கைவரைப்படம். ஆஸ்மி தனது வாதத்தில் மேலும் முறையிட்டதாவது, 26/11 கொல்லப்பட்ட அபு இஸ்மாயிலின் உடல் முழுவதும் இரத்தக் படிந்து இருந்ததாகவும், குறிப்பாக அவனின் கீழ் இடுப்புப் பகுதி முழுவதும் இரத்ததில் நனைந்ததாக இருந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இந்த வரைப்படம் எப்படி ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லாமல் இருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அபு இஸ்மாயிலின் அந்த இரத்தக்கறை படிந்த துணிகள் மற்றும் உள்ளாடையையும், நீதிபதி கையுறையை அணிந்து எடுக்குமாறு கேட்டுக் கொண்டும், ஆஸ்மி கையுறையை அணியாமல், வெறும் கையில் நீதிபதியிடம் எடுத்துக் கொடுத்து, இந்த வரைப்படம் போலிஸ்காரர்களால் ஜோடிக்கப்பட்டவை என்று வாதாடி குற்றம்சாட்டிருந்தார்.
ஆஸ்மியின் சகோதரர் காலிதின் உதவியுடன் இவ்வழக்கில் தற்பொழுது வாதாடும் வழக்கறிஞர் ஆர்.பி.மோகாஷி கூறுகையில், ஆஸ்மி பஹிம் அன்சாரி வழக்கில் இரவு 3 மணிவரை அயராது உழைத்ததாகவும், மேலும் ஆஸ்மியின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக கூட பஹிம் ஒரு அப்பாவி என்றும், இவ்வழக்கில் அனைத்தும் பஹிமுக்கெதிராக பெரிய அளவில் போலீசார் புதிர்களை ஜோடித்துள்ளதாகும் தெரிவித்தாக அவர் கூறினார்.
இவ்வழக்கில், ஆஸ்மியின் கடின உழைப்பு நிச்சயம் அவருக்கு வெற்றியை தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பொய்கட்டிய புதிர்கள் முன்னால் இருக்கும் நிலையை நீதிக்கு புரிய வைத்த ஆஸ்மியின் உழைப்பு, அப்பாவிகள் வாழ்வில் விழித்திருந்தும் தூங்கியதை போல் நடிக்கும் சட்டம், இந்த புதிர்களை கண்டுபிடித்து அப்பாவிகளை விடுவித்து! உரியவர்களை தண்டிக்குமா?...
ஆஸ்மி போன்ற நல்லவர்கள் உண்மையான தீவிரவாதிகளால் கொல்லப்படுவது நம் கண்களில் இரத்தக் கண்னீரை வரவழைத்தாலும், இவ்வழக்கின் முக்கிய கருத்துக்கள் பதிக்கப்பட்டதன் மூலம், ஆஸ்மி நம்முடன் தான் வாழ்கிறார் என்று சொன்ன தெஹெல்கா நிருபரின் வார்த்தைகள் நம் செவியை தட்டுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
source:Mumbai Mirror
0 கருத்துகள்: on "இறந்த பின்னரும் 26/11 வழக்கில் முக்கிய பங்காற்றும் ஷாஹித் ஆஸ்மி"
கருத்துரையிடுக