டெஹ்ரான்:காஸ்ஸாவில் இஸ்ரேல் கடந்த 2008-09 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற கொடூரத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலின் துணை பிரதமர் ஷில்வான் ஷாலோம் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அரசு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தியபொழுது,"அவர்கள் காஸ்ஸாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மறந்துவிட வேண்டுமென்று நினைக்கிறார்கள். நான் சியோனிஷ்டுகளிடமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களிடமும் கூறிக்கொள்கிறேன் ஏற்கனவே அவர்கள் கொடுமையான குற்றத்தை புரிந்து விட்டார்கள்.
காஸ்ஸாவின் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அது உங்களை பாதுகாக்காது மாறாக மரணத்தின்பால் அழைத்துச்செல்லும்." இவ்வாறு அஹ்மத் நிஜாத் கூறினார்.
ஏற்கனவே அஹ்மத் நிஜாத் இஸ்ரேலை உலக வரைப்படத்திலிருந்து துடைத்தெறிவோம் என மீண்டும் மீண்டும் கூறியதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
source:AFP
0 கருத்துகள்: on "காஸ்ஸாவின் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு அஹ்மத் நிஜாத் எச்சரிக்கை"
கருத்துரையிடுக