5 ஏப்., 2010

மெக்சிகோவின் பஜா கலிபோர்னியாவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள பஜா கலிபோர்னியாவில் கடும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பூகம்பத்தின் மையப் பகுதி பஜா கலிபோர்னியாவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண எல்லையில் உள்ளது.

பூகம்பத்தின் அதிர்வுகள் கலிபோர்னியாவின் தென் பகுதியில் உணரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ், சான்டிகோ ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை தெரியவில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மெக்சிகோவின் பஜா கலிபோர்னியாவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்"

கருத்துரையிடுக